மு .செ .மல்லையா ..
Friday, 3 March 2017
தன்னம்பிக்கையை அதிகமாக ஏற்றிக்கொள்ளவும் கூடாது ..
தவறுகளை அதிகமாக சேர்த்துகொன்டே இருக்கவும் கூடாது ...
--- யாரோ மல்லையாவாம் .
Tuesday, 22 March 2016
என்னுள்ளில்...
உனது புகைப்படங்களையும்
நினைவுகளையும்
மட்டுமே வைத்துக்கொண்டு
காலத்தின் மடிப்புகளில்
கரைந்து கொண்டிருக்கிறேன் ..
என்னில் நீங்காதிருப்பது
நெஞ்சில் இழப்பும்
நீ .. இல்லாமையுந்தான் ..
உன்னோடிருந்த
நினைவுகளின் மிச்சங்களை மட்டுமே
வைத்துக்கொண்டு
வாழ்ந்துகொண்டும்
கொஞ்சங்கொஞ்சமாய்
செத்துக்கொண்டுமிருக்கிறேன் ..
-----
யாரோ மல்லையாவாம்..
Saturday, 5 March 2016
இளமையில் கல் ..
செங்கல்சுமந்து சாலை கடந்த
ஏழைச்சிறுவன்
சுவர்சுமந்த எழுத்தினை படித்துவிட்டுச் சிரித்தான்
இளமையில் கல் ..
எனும்
வாசகத்தை பார்த்து ....
------------யாரோ மல்லையாவாம் ......
Thursday, 18 February 2016
போராடு...
மெழுகுவர்த்திகூட
சுமந்துகொண்டுதானிருக்கிறது
தீயின் வலியை...
-----யாரோ மல்லையாவாம் ..
Monday, 15 February 2016
ஹைக்கூ ...
மென்மையாய் விழுந்தது சருகு
வளைந்து நெளிந்தது மலைப்பாம்பாய்
நெடும்பணை
குளத்தில் ....
-----யாரோ மல்லையாவாம்..
Saturday, 13 February 2016
கடுகு டப்பா ..
பருத்திக்கு களையெடுத்து
பத்துரூபா சம்பளத்தில்
எள்ளளவு மிச்சத்தில்
எனக்காக சேர்த்து வைப்பா..
ஆக்குப்பறையில் அடுக்கிவச்ச
கடுகு டப்பா ..
என் தாயிக்கு காசு டப்பா..
முகமூடி..
சந்திப்பவர்களிடமும்
சந்தர்ப்பங்களிலும்..
என் சுயத்தை இழந்து
ஏதாவதொரு
முகமூடி மாட்டியே இருக்க வேண்டியிருக்கிறது........
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)